ஜேஎம்எம் - காங்கிரஸ் இடையே எந்த பிரச்சினையும் இல்லை: ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் தகவல்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ்இடையே எந்த பிரச்சினையும் இல்லை; காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதன் உட்கட்சி விவகாரம் என ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்த சம்பய் சோரன் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில் அவரது அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டது. அதில்8 எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் அமைச்சர் பதவிகிடைக்காத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் அதிருப்தியடைந்தனர். அவர்கள் கட்சி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து முதல்வர் சம்பய் சோரன் கூறுகையில், ‘‘காங்.எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, அவர்களின் உட்கட்சிவிவகாரம். அதற்கு அவர்கள்தான்தீர்வு காண வேண்டும். இதில்நான் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மாநிலத்தில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கட்சி இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாம் நன்றாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்