சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் தொடக்கம்: 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடல்

By இரா.வினோத்

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில், 10-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை மாநில முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது விழா மலரையும் சித்தராமையா வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை கரீனா கபூர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறும் திரைப்பட விழாவில் 68 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில், ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ-லெட், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர் 'அசோக மித்ரன்' என்ற ஆவண திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குறித்த ஆவண திரைப்படமும், கருத்துரிமை தொடர்பான 2 ஆவண திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. பெங்களூரு ஓரியன் மாலில் உள்ள 11 திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் அங்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

விழாவில் சர்வதேச, ஆசிய, இந்திய, கன்னட ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் படங்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல்வர் சித்தராமையா விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்