58 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதிக்கு திருமணம்: மணமகனுக்கு வயது 73; மணமகளுக்கு 67

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குருவங்கா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி (73). இவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்டம் பகுதியை சேர்ந்த போலம்மாள் (67). இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 58 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு நான்கு மகன்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணங்கள் நடந்து, பிள்ளைகளும் பிறந்து பெரியவர்களாயினர். பேரன், பேத்திகள் கூட பெரியவர்களாகி விட்ட நிலையில், சம்பிரதாய முறைப்படி தான் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற கவலை ராமசாமிக்கு இருந்தது.

இதனை அறிந்த மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள், ராமசாமிக்கும் போலம்மாளுக்கும் முறைப் படி திருமணம் செய்வதென முடிவு செய்தனர். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் திருமணத்திற்கு அழைத் தனர். இவர்களது திருமணம் தோட்ட பல்லி என்கிற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் எளிமையாக நடந்தது.

மணக்கோலத்தில் ராமசாமி, போலம்மாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்