சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 சேனல் இமேஜர் உள்ளிட்ட 25 விதமான ஆய்வு கருவிகள், பூமியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து, வானிலை தகவல்களை வழங்கும்.
கார்டோசாட்-2 விடுவிப்பு: இதற்கிடையே, புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ கடந்த 2007-ல் விண்ணில் செலுத்திய கார்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியில் இருந்து 635 கிமீ தொலைவில் பூமியை வலம் வந்தவாறு நகர்ப்புற திட்டமிடல் செயல்பாடுகளுக்கு தேவையான படங்களை எடுத்து அனுப்பியது. அதன் பயன்பாடு முடிந்ததால், அதில் இருந்த எரிபொருளை பயன்படுத்தி கடந்த 14-ம் தேதி மாலை 3.48 மணி அளவில் புவி வட்டப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்குள் விழ வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago