புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது:
பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை அறக்கட்டளை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 23-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு, 6 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீராம் லல்லா ஐந்து வயது குழந்தை. அதிகாலையில் விழிக்கும் அவர் பக்தர்களை இடைவெளியின்றி சந்திப்பதால் சிறிது ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை தெய்வம் ஓய்வெடுக்கும் வகையில் கோயில் கதவுகள் சாத்தப்படும். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago