கர்நாடக மாநில பட்ஜெட்டில் கிறிஸ்தவர்கள், வக்ஃபு வாரியத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநில பட்ஜெட்டில் கிறிஸ்தவர்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி, வக்ஃ்பு வாரியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான‌ பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சித்தராமையா தனது பட்ஜெட் உரையில், “கர்நாடகாவில் வக்ஃபுவாரியத்தின் வளர்ச்சிக்கு ரூ.100கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிறிஸ்தவ மக்களின்மேம்பாட்டுக்கு ரூ.200 கோடிஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜைன மதத்தின் புனிதத் தலங்களின் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்’’என அறிவித்தார்.

பாஜக எதிர்ப்பு: இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது: சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்துசில திட்டங்களை அறிவித்துள்ளார். பெரும்பான்மை இந்து மக்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE