புதுடெல்லி: டெல்லி அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். டெல்லி அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் தொழிற்சாலையில் ரசாயனப் பொருட்கள் இருந்ததால் அவை வெடித்து சிதறின. இதனால் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. தீ விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழிற்சாலைக்குள் இருவர் சிக்கியிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. ரசாயன பொருட்கள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago