சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலமாக நாளை (பிப்ரவரி 17) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில்இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதன் இறுதிகட்ட பணிக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று (பிப்ரவரி 16) மதியம் 2.05 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும்.
இதன்மூலம் புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி மற்றும் 3டிஆர் செயற்கைக்கோள்களின் தொடர்ச்சியாகவே இந்த 3டிஎஸ் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago