மலையாள நடிகை சனுஷாவை ரயலில் பாலியல் துன்புறுத்தல் செய்த தமிழக இளைஞர் திருச்சூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ரயிலில் உதவிக்காக சத்தமிட்டபோது பயணிகள் யாரும் வராதது நினைத்து வேதனைப்படுவதாகவும் நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை சனுஷா. இவர் தமிழில் ரேனிகுண்டா, பீமா உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்தில் கருமாடிகுட்டன், கீர்த்தி சக்ரா, சோட்டா மும்பை உள்பட பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு ரயிலில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அது குறித்து நடிகை சனுஷா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் ரயிலில் முதல் வகுப்பில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டு இருந்தேன். அப்போது, இரவு 1 மணி இருக்கும், என் உதட்டில் யாரோ கை வைப்பது போன்று இருந்தது. அப்போது நான் விழித்துப்பார்க்கும் போது, எனக்கு எதிராக படுக்கையில் இருந்த இளைஞர் என் அருகே நின்று கொண்டு இருந்தார். உடனடியாக அவரின் கையை பிடித்து சத்தமிட்டேன்.
அப்போது, அந்த நபர் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என்றார்.
ஆனால் உதவிக்காக மற்றவர்களை அழைத்து சத்தமிட்டேன். அப்போது, என் குரலைக் கேட்டு அருகே இருந்த உன்னி, ரஞ்சித் ஆகிய இரு பயணிகள் மட்டுமே உதவிக்கு வந்தனர். மற்ற பயணிகள், அனைவரும் வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் உதவி செய்ய வரவில்லை. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு உதவிக்காக அலறும்போது, யாரும் உதவ முன்வராதது வேதனையாக இருந்தது.
வழக்கமாக நான் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிடும் போது, உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என ரசிகர்களும், ஆதரவாளர்களும் பதிவிடுவார்கள். சமூக ஊடகங்களில் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது இதுபோன்ற சம்பவங்களின்போதும் எனக்கு ஆதரவாக வரவேண்டும்,
இந்த சம்பவம் எனக்கு வேதனையளிக்கிறது. சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். இது போன்ற சூழலில் ஒரு பெண் எப்படி துணிச்சலாக இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு நடிகை சனுஷா தெரிவித்தார்.
நடிகை சனுஷாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை திருச்சூர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தமிழகத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயதான போஸ் என்பது தெரியவந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இம்மாதம் 15-ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago