புதுடெல்லி: இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி (என்டிஏ) 64 தொகுதிகளில் வென்றது. சமாஜ்வாதி 5, பகுஜன் சமாஜ் 10, காங்கிரஸ் 1 என பிற கட்சிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் வரும் தேர்தலில்‘மிஷன் 80’ எனும் பெயரில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற என்டிஏ திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக தனது எம்.பி.க்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கைஅறிய ரகசிய கணக்கெடுப்பு நடத்தியது. இதில் பல எம்.பி.க்களுக்குமறுவாய்ப்பு அளித்தால் தோல்வியே எனத் தெரியவந்துள்ளது.
மேலும், மதுராவில் நடிகை ஹேமமாலினி, பரேலியில் சந்தோஷ் கங்குவார், காஜியாபாத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பிலிபித்தில் மேனகா காந்தி ஆகியோருக்கு மூத்த வயதின் காரணமாக பாஜக மறுவாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. மேனகா காந்தியின் மகனும் சுல்தான்பூர் எம்.பி.யுமான வருண் காந்தி, கட்சியை விமர்சிப்பதால் அவரும் போட்டியிடுவது கடினம். இந்த வகையில் மொத்தம் 40 சதவீத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது.
அதேசமயம், வாக்காளர்களின் செல்வாக்கு பெற்ற 74 பேர் பாஜகவின் பரிசீலனையில் உள்ளனர். உ.பி.யில் என்டிஏவில் இடம்பெற்றுள்ள சுஹல்தேவ் சமாஜ்,மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் தலைமையிலான அப்னாதளம், நிஷாத் ஆகிய கட்சிகளில் சில வேட்பாளர்களை பாஜக சின்னத்தில் போட்டியிட வைக்கவும் திட்டமிடப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “இறுதி முடிவை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எடுப்பார்கள். டெல்லியில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தனர்.
பாஜகவின் பல ஆண்டு கால வாக்குறுதியான அயோத்தி ராமர் கோயில் தற்போது திறக்கப்பட்டு விட்டது. மேற்கு உ.பி.யில் ஜாட் சமூகத்தின் வாக்குகளை கவர அதன் முக்கியக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்துடன் பாஜககூட்டணி அமைக்கிறது.
எனவே இவற்றுக்கான பலனும் தங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் கிடைக்கும் என பாஜகநம்புகிறது. உ.பி.யில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவிற்கு செல்வாக்கு கூடியுள்ளது. எனவே, இந்தமுறை எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதியும் கிடைக்காமல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago