பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நர பரத் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தமாக பரத் ரெட்டிக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பெல்லாரி பகுதியில் மட்டும் நான்கு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதுதவிர, சென்னையில் உள்ள பரத் ரெட்டியின் அலுவலகம், அவரது தந்தையின் அலுவலகம், அவரது மாமா பிரதா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் என முக்கிய இடங்களில் சோதனை தீவிரமாக நடந்துவருகிறது.
அத்தனை இடங்களிலும் இன்று காலை 6.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பெங்களூரில் இருந்துவந்த அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையை மேற்கொண்டுள்ளனர். பரத் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள் மீது எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
யார் இந்த நர பரத் ரெட்டி?: பெல்லாரி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் நர பரத் ரெட்டி. பெல்லாரி பிரபல சுரங்க தொழிலதிபர் ஜனார்தன் ரெட்டியின் கோட்டையாக கருதப்படும் இடம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் ஜி.சோமசேகர் ரெட்டி, கேஆர்பிபி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜனார்த்தன் ரெட்டியின் மனைவி அருணா லட்சுமி ஆகியோரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நர பரத் ரெட்டி வெற்றிவாகை சூடினார். கர்நாடகாவின் குருகோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான சூர்யநாராயண ரெட்டியின் மகன்தான் பரத் ரெட்டி.
கர்நாடக மாநில அரசியல் தலைவர்களில் செல்வாக்குமிகுந்த இளம் தலைவராக அறியப்படுகிறார் இவர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு சுரங்க தொழிலதிபர் ஜனார்தன் ரெட்டியை தொடர்ந்து எதிர்த்து வரும் இவர், அவருக்கு எதிராக சட்டசபையில் நடத்திவரும் அதிரடி விவாதங்களை நடத்தியது பேசுபொருளானது.
» நாடாளுமன்றத்தில் இன்று ராமர் கோயில் குறித்த தீர்மானம்: பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்பு
» மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் சட்டங்கள்: மக்களவையில் கே.நவாஸ்கனி குற்றச்சாட்டு
எனினும், ஜனார்தன் ரெட்டியை போலவே பரத் ரெட்டியின் குடும்பமும் கிரானைட் குவாரி தொழில் நடத்தி வருகிறது. இவர்களின் குடும்பத்துக்கு கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் ஒன்று, ஆந்திராவின் ஓங்கோல் மாவட்டத்தில் ஒன்று என இரண்டு கிரானைட் குவாரிகள் சொந்தமாக உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago