மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி: தேர்தல் ஆணையம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (EC) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும், உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே. இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளது. உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் விவரங்களின்படி, வரவிருக்கும்மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2019-ஐ விட 2024 தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 6% உயர்ந்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தல் 2024-ல் வாக்களிக்க தகுதி பெற்ற 18-19 வயதுடைய முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை - 1,84,81,610 ஆக உள்ளது. 20-29 வயதுடையவர்களின் எண்ணிக்கை - 19,74,37,160 ஆக உள்ளது. 80 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை - 1,85,92,918 ஆக உள்ளது. அதோடு, 100 வயதை கடந்த வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2,38,791 ஆக உள்ளது.

மேலும், வீடு வீடாகச் சென்று முழுமையான சரிபார்ப்புக்குப் பிறகு இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 67,82,642 ஆகவும், நிரந்தரமாக முகவரி மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,11,128 ஆகவும், நீக்கப்பட்ட போலி வாக்காளர்களின் எண்ணிக்கை 22,05,685 ஆகவும் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்