கூட்டாட்சியை அழிக்க முயல்கிறது பாஜக: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இது இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை குலைக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பேசினார்.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசின் அணுகுமுறை உட்பட கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா மற்றும் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசியதாவது: நாங்கள் வடக்கு–தெற்கு பிரிவை ஏற்படுத்துவதாக கூறுவதுஅடிப்படை ஆதாரமற்றது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறையைஅழிக்க மத்திய அரசுதான் முயல்கிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது.

நிதிப் பகிர்வில் நியாயமற்று செயல்படுகிறது. மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற நாடாக மாறுகிறது என்பதற்கும் உதாரணம். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்