புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை அவர் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
47 பக்கங்கள் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில், "காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. அதோடு, சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏற்றதாகவும் இருந்தது. 1991-ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கான பெருமைக்கு உரிமை கோர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமை தவறிவிட்டது. அதோடு, 2004-ல் ஆட்சிக்கு வந்த அவர்கள் அந்த சீர்திருத்தங்களை கைவிட்டார்கள்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது நாட்டின் பொருளாதார கொள்கைகள் பல தவறான திசைகளில் சென்று முன்னேறுவதற்கு வழி இல்லாத நிலையில் சிக்கி இருந்தது. உடனடியாக சரிசெய்ய வேண்டிய நிலையில் நாட்டின் பொருளாதாரம் இருப்பதை உணர்ந்தோம். மிகப் பெரிய பொருளாதாரத்துக்கான அடித்தளத்தை மேம்படுத்தும் அதே வேளையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஏற்ப அமைப்புகளையும் செயல்முறைகளையும் மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொண்டோம்.
» நாடாளுமன்றத்தை முற்றுகையிட திரண்ட உ.பி விவசாயிகள் நொய்டாவில் தடுத்து நிறுத்தம்
» “2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்” - பிரதமர் மோடி நம்பிக்கை
நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால நீடித்த முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். 2047-க்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் சார்பில் கருப்பு அறிக்கையை அதன் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago