மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாக மாநில வரிகள் உதவி ஆணையர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) அதிகாரிகள் கூறியதாவது: மகாராஷ்டிர ஜிஎஸ்டி துறையில் மாநில வரி (புலனாய்வு பிரிவு) உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் அர்ஜுன் சூர்யவன்ஷி. இவரது தலைமையிலான குழுவினர் ரூ.20 கோடிக்கு மேல் வரி நிலுவை வைத்துள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூலை 5 முதல் 7-ம் தேதி வரை சோதனை நடத்தினர். பலமுறை நினைவூட்டிய பிறகும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் வரி நிலுவையை செலுத்தவில்லை.
இந்நிலையில் வரி நிலுவை பிரச்சினையை தீர்த்துவைக்க அந்த நிறுவனத்தின் இயக்குநரிடம் அதிகாரிகள் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில வரிகள் உதவி ஆணையர் அர்ஜுன் சூர்யவன்ஷி கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தனியார் நிறுவன இயக்குநருக்கு வாட்ஸ்-அப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற வில்லை. என்றாலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டது, விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அர்ஜுன் சூர்யவன்ஷி மற்றும் பிற அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago