கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தனது 13-வது பட்ஜெட்டையும், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசின் 6-வது பட்ஜெட்டையும் இன்று தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இந்த பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
1. மாநில, தேசிய, சர்வதேச முன்னாள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மாத ஓய்வூதியம், ரூ.750லிருந்து,ரூ.1000 மாகவும், ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1500 ஆகவும், ரூ.1,500லிருந்து, ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.
2. மத்தியமாக சஞ்ஜீவினி காப்பீடு திட்டத்தின் மூலம், பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் ரூ.5 லட்சம் வரை விபத்துக்கு மற்றும் ஆயுள்காலக் காப்பீடு வசதி.
3. மாநிலத்தில் ஒருலட்சத்து 42 ஆயிரத்து 500 ஹெக்டேர் வனப்பகுதியை காக்க சிறப்பு நிதி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4. கர்நாடக மாநிலத்தில் காற்றுமாசுவைக் கண்காணிக்க, பல்வேறு இடத்தில் காற்று மாசு கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
5. முக்கிய மந்திரி அகிலா பாக்ய யோஜனா திட்டத்தின் கீழ் 30 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பும், இரட்டை அடுப்பும் வழங்கப்படும்.
6. தனியார், அரசு பங்களிப்புடன் விளையாட்டுக்காக சிறப்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
7. எஸ்சி பிரிவைச் சேர்ந்த ஆண் இதர வகுப்பைச் பெண்ணை திருமணம் செய்தால் ரூ3 லட்சம் ஊக்கத்தொகையும், எஸ்சிபிரிவைச் சேர்ந்த பெண், இதர வகுப்பைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்தால் ரூ.5லட்சமும் ஊக்கத்தொகை.
8. தேவதாசி முறையில் கீழ் வளர்ந்த பெண் குழந்தைக்கு ரூ. 5லட்சமும், ஆண் குழந்தைக்கு ரூ. 3 லட்சமும் திருமண உதவித்தொகையாக அளிக்கப்படும்.
9. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்புக்காக படிப்படியாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.
10. கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாயி திடீரென இறக்க நேர்ந்தால், அவரின் கடன் தொகையில் ரூ.ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும்.
11. பெண்களுக்கும், மீனவர்களுக்கும் வட்டியில்லாமல் ரூ.50 ஆயிரம்வரை கடன் உதவி.
12. 5.9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியத் திட்டத்தின் கீழ் 30 சதவீதம் ஊதிய உயர்வு..
13. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 70 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கொண்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
14. அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரிசி வழங்குவது 5 கிலோவில் இருந்து 7 கிலோவாக உயர்வு.
15. அனைத்து மாவட்டங்களிலும் நம்ம கேண்டீன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
16. உஜவாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் பெறாத 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் சேவை.
17. 8ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ், சுடிதார், மூக்கு கண்ணாடி, புத்தகங்கள் வழங்கப்படும்.
18. பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிஸ் முதலாம் ஆண்டுபடிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago