“மேயர் தேர்தலிலேயே முறைகேடு எனில், பிற தேர்தல்களில்...” - பாஜக மீது கேஜ்ரிவால் சாடல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் குறித்து பாஜகவை சாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "மேயர் தேர்தலிலேயே முறைகேடு செய்கிறவர்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இந்தப் போராட்டம் அங்கிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளியுள்ள டிடியு மார்க்கில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகம் முன்பாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு தடுப்புகள் போடப்பட்டு, போலீஸார் நிலைநிறுத்தப்பட்டிருந்ததால் ஆம் ஆத்மி கட்சியினரால் அங்கு செல்ல முடியவில்லை.

இதனிடையே, ஆம் ஆத்மி தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: "உலகத்திலேயே பெரிய கட்சி, சண்டிகர் மேயர் தேர்தலில் கேமராவின் முன்னால் வாக்குகளைத் திருடுவதைப் பார்த்தோம்.

சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல்களில் பாஜக முறைகேடுகள் செய்வதாக நாம் கேள்விப்பட்டோம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் போன்றவைகள் குறித்தெல்லாம் கேள்விப்பட்டோம். அவற்றுக்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. ஆனால் சண்டிகரில் அவர்கள் வாக்குகளைத் திருடும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

மேயர் தேர்தலிலேயே இவ்வாறு முறைகேடு செய்கிறார்கள் என்றால் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் என்னவெல்லாம் அவர்கள் செய்வார்கள். அதிகாரத்துக்காக அவர்கள் நாட்டையே விற்கவும் செய்வார்கள். ஆனால், அவ்வாறு செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. நாட்டையும் ஜனநாயகத்தையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்" என்று கேஜ்ரிவால் பேசினார்.

மேலும் கேஜ்ரிவால் கூறுகையில், "போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை போலீஸார் வரவிடாமல் தடுத்துவிட்டனர்” என்றும் குற்றம்சாட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்