“வட மாநிலங்கள் பின்தங்க காங்கிரஸே காரணம்” - டி.கே.சுரேஷுக்கு மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ், வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை தனி நாடாக பிரிக்க வேண்டி வரும் எனக் கூறி இருக்கிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில், அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே பிரிவினை பேசுகிறார். இந்த போலி அரசியலுக்கு; பொய் அரசியலுக்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

தென்னிந்திய மாநிலங்களின் வரி வருவாய், வட இந்திய மாநிலங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக டி.கே. சுரேஷ் கூறி இருக்கிறார். வட இந்தியாவின் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் இயற்கை வளங்கள் நிறைந்தவை. இருந்தும் அவை பின்தங்கி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் மாநிலங்கள் பின் தங்கி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியையே பொறுப்பாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

டி.கே. சுரேஷ் கூறியது என்ன?: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புறநகர் எம்பி-யும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், “ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய பங்கை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை. தென் இந்திய மாநிலங்கள் தொடர்ந்து அநீதியை எதிர்கொண்டு வருகின்றன.

தென் இந்திய மாநிலங்கள் மூலம் பெறப்படும் வரி வருவாய் வட இந்திய மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரிக்கைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். மத்திய அரசு எங்களிடம் இருந்து ரூ.4 லட்சம் கோடியை பெறுகிறது. ஆனால், சொற்பத் தொகையையே எங்களுக்கு வழங்குகிறது. இது குறித்து நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், அனைத்து தென் இந்திய மாநிலங்களும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்