தமிழக தொடர்பு | பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவை குறிப்பிட்டுப் பேசிய நிதியமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்த தனது இடைக்கால பட்ஜெட் உரையில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைக் குறிப்பிட்டு பேசினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் உரையில் தமிழகத்தை குறிப்பிடும் வகையில் திருக்குறள் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை மேற்கோள் காட்டுவார் நிர்மலா சீதாராமன். ஆனால், இன்றைய உரையில் திருக்குறள் உள்ளிட்ட எந்த மேற்கோள்களும் இடம்பெறவில்லை. மாறாக, தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைக் குறிப்பிட்டுப் பேசினார்.

நிர்மலா சீதாராமன் தனது உரையில், "விளையாட்டில் இந்தியா புதிய உயரங்களை எட்டிவருகிறது. இளைஞர்கள் விளையாட்டில் சாதனை படைத்துவருவது நாட்டுக்கு பெருமை சேர்க்கிறது. 2023ல் நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச பதக்கங்களைப் பெற்றது. 2010 இல் 20 க்கும் குறைவான செஸ் கிராண்ட்மாஸ்டர்களே இருந்தனர். ஆனால், தற்போது இந்தியாவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது. செஸ் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா கடுமையான போராத்தை நடத்தினார்" என்று பேசினார்.

இதையும் படிக்க: > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE