சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி: உயர் நீதிமன்றத்தை நாடிய இண்டியா கூட்டணி

By செய்திப்பிரிவு

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி, உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மன்றத்தில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிர ஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன. என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி இடையிலான முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இண்டியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 வாக்குகள் பெற்ற பாஜகவேட்பாளர மனோஜ் சோன்கர்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார்.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.

மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சண்டிகர் உயர் நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி அணுகியுள்ளது. ஆம் ஆத்மியின் மனு இன்றுவிசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்