புதுடெல்லி: வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) நேற்று அறிவித்தது.
13 மாநிலங்களைச் சேர்ந்த50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், 2 மாநிலங்களைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஏப்ரல் 3-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளனர்.
இதையடுத்து, உத்தர பிரதேசம் (10), மகாராஷ்டிரா (6), பிஹார் (6), மேற்கு வங்கம் (5), மத்திய பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகா (4), ஆந்திர பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தராகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியாணா (1), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
அட்டவணையின்படி பிப்ரவரி8-ல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசிதேதி பிப்ரவரி 15 என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 16, வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக் கெடுப்பு பிப்ரவரி 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
» 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தேர்தல் முடிவு: வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 27 மாலை 5 மணிக்கும், தேர்தல் முடிவு பிப்ரவரி 29-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பின ருக்கான பதவிக்காலம் 6 ஆண்டு கள் ஆகும். மாநில சட்டப் பேர வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் (எம்எல்ஏ) மறைமுகமாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago