குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 277 ராணுவ வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலண்ட்ரி விருதுகள் ஒரு வருடத்தில் இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வீரதீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 277 கேலண்ட்ரி விருதுகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படவுள்ளது. அதில், மாவோஸ்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி, வீரதீர செயல்கள் புரிந்த 119 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பாக பணியாற்றிய 133 பேருக்கும், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த 25 பேருக்கும் இந்த கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்படவிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு 275 காவல் துறையினருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 72 காவலர்களும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 காவலர்களும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 26 காவலர்களும் தேர்வாகியுள்ளனர். மேலும் ஜார்கண்டில் இருந்து 23 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த 15 பேரும் விருது பெற தேர்வாகியுள்ளனர். அதோடு, டெல்லியைச் சேர்ந்த 8 காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 65 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர, எல்லை பாதுகாப்புப் படையான சசாஸ்த்ர சீமா பாலைச் சேர்ந்த 21 பேருக்கும் விருது வழங்கப்படவுள்ளது. சஷாஸ்த்ரா சீமா பால் என்பது நேபாளம் மற்றும் பூட்டான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் எல்லைக் காவல் படையாகும். உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏழு மத்திய ஆயுதக் காவல் படைகளில் இதுவும் ஒன்றாகும்.

காங்கோவில் ஐநா சார்பில் அமைதியை நிலைநாட்டும் படையில் சிறப்பாக பணியாற்றிய பாதுகாப்பு படை படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் Police Medal for Gallantry (PMG) வழங்கப்படவுள்ளது. மேலும் 102 வீரர்களுக்கு குடியரசு தலைவர் சிறப்பு சேவைக்கான விருதுகளும், 94 காவல்படை வீரர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தீயணைப்பு துறையில் சிறப்பாக செயல்பட்ட நான்கு வீரர்களுக்கும், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய நான்கு வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்