ரூ.60 கோடி லஞ்ச விவகாரம்: 7 ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.60 கோடி லஞ்ச முறைகேடு தொடர்பாக 7 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் கடந்த 2016-23-ம் ஆண்டுகளில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடர்பாக ரூ.60 கோடி லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய துணை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம்) ராம்பால், முதுநிலை கண்காணிப்பு பொறியாளர்கள் ரிதுராஜ் கோகோய், திராஜ் பகவத், மனோஜ் சைக்கியா, மிதுன் தாஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மற்றும் ‘பாரதிய இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் டெல்லியில் இந்த அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் தொடர்புடைய 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொத்து வாங்கியது தொடர்பான வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தின் முதுநிலை செக் ஷன் பொறியாளர் சந்தோஷ் குமாரை கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைது செய்தது. இது தொடர்பாக மேற்கண்ட தனியார் நிறுவனம் உட்பட 19 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது ரூ.60 கோடி லஞ்ச விவகாரம் தெரியவந்தது. இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்