சிறு கார் விபத்தில் சிக்கியதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு லேசான காயம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சென்ற கார் புதன்கிழமை சிறு விபத்துக்கு உள்ளானதில், அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பர்த்வானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்பு காரில் தலைநகர் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கான்வாய் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக மற்றொரு கார் குறுக்கே வந்தது. திடீரென எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க, மம்தா பானர்ஜியின் கார் ஓட்டுநர் துரிதமாக பிரேக் போட்டார். எதிர்பாராத இந்த செய்கையால் முதல்வர் மம்தா பானர்ஜி கார் வெகுவாக குலுங்கியது. இதில் முதல்வரின் முன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் கூறுகையில், "நிர்வாக கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக முதல்வர் பானர்ஜி ஹெலிகாப்டர் மூலமாக இன்று கிழக்கு பர்த்வான் பகுதிக்குச் சென்றார். கொல்கத்தா திரும்பும்போது மோசமான வானிலை காரணமாக அவரால் மீண்டும் ஹெலிகாப்டரில் செல்ல முடியவில்லை. இதனால், சாலை மார்க்கமாக அவர் கொல்கத்தா திரும்பினார். கிளம்பிய சிறிது நேரத்தில், அவர்களது கான்வாய் பாதைக்குள் கார் ஒன்று வழி தவறி புகுந்ததது. இதனால், முதல்வரின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். காரில் எப்போதும் முன் இருக்கையில் அமரும் முதல்வர் இந்த திடீர் நிகழ்வால் நிலைகுலைந்து முன்பக்க கண்ணாடி மீது மோதினார். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெரிய காயம் ஏதுவும் இல்லை. மருத்துவ உதவிக்காக கூட காரை நிறுத்தாமல் முதல்வர் உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்