யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: அசாம் அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரத் ஜோடா நியாய யாத்திரையை நேற்று மீண்டும் தொடங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் நியாய யாத்திரை நிகழ்ச்சிகளுக்கு அசாம் அரசு அனுமதி மறுப்பதாகவும், யாத்திரையில் பங்கேற்கும் மக்களை அசாம் அரசு அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ராஜ்கர்-கோலாங்கி எல்லையில் தனது நடை பயணத்தை ராகுல் காந்தி நேற்று மீண்டும் தொடங்கினார். அவரது யாத்திரை நேற்றுமீண்டும் அசாம் மாநிலத்தில் நுழைந்தது. விஸ்வநநாத் சவு்ராலி, ஓவனா ஆகிய பகுதிகளில் அவர் நடை பயணம் மேற்கொள்கிறார்.

அசாம் மாநிலத்தின் லக்மிபூரில் காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பாஜக தொண்டர்கள் நேற்று முன்தினம் கிழித்ததாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் அளித்த பேட்டியில், ‘‘மக்களுக்கு அசாம் அரசு அச்சுறுத்தல் விடுக்கிறது, பாரத் நியாய யாத்திரையின் பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாஜக., கட்சியால் மக்களை அச்சுறுத்த முடியாது’’ என்றார்.

பாதுகாப்பு: இதற்கிடையே அசாமில் நக்சலைட்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கமாண்டோ வீரர்களை அசாம் அரசு ஈடுபடுத்தவுள்ளது. இன்று ராமர் கோயில்திறப்பு விழாவை முன்னிட்டு, ராகுல் நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமாண்டே வீரர்கள் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படுவர் என அசாம் முதல்வர்ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

லக்மிபூர் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கடந்த10 ஆண்டுகளில், மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்த உரிமை மற்றும் நீதியை அழிக்க பாஜக முயன்றுள்ளது. மக்களின் குரலை அடக்கி, அதன் மூலம் ஜனநாயகத்தை ஒழிக்க பாஜக விரும்பு கிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE