புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இதனிடையே சமூக ஒழுங்கை குலைக்கும் வகையில் செயல்படுபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தியது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்கள் மற்றும்ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளை காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் இருந்தால் அது தொடர்பான தகவல்களை உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மத ரீதியாக பிரச்சினையுள்ள பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் காவல்அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் இருத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ராமர் கோயில் தொடர்பான போலி செய்திகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய 100 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago