அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோயிலுக்குப் பரிசாக வழங்கவுள்ளார். இதுவே உலகில் உள்ள ராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: வால்மீகி எழுதிய ராமாயணப் புத்தகம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.
தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகியுள்ளது.
இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டைப் பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தை அச்சிடுவதற்கான மை, ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் எடை 45 கிலோவாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.
நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடிக்கும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோயில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்கவுள்ளோம். இவ்வாறு மனோஜ் சாத்தி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago