வெள்ளி விழா நிகழ்ச்சியில் சோகம் - இரும்பு கூண்டு அறுந்து சிஇஓ உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள விஸ்டெக்ஸ் எனும் அமெரிக்க - இந்திய நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டு அங்குள்ள பிரபல ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த வியாழக்கிழமை இரவு பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய்ஷா (56) மற்றும் தலைவர் டி. விஸ்வநாத் ராஜு ஆகிய இருவரையும், விழா மேடைக்கு, அந்தரத்திலிருந்து ஒரு இரும்பு கூண்டு மூலம் தரை இறக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படியே இருவரும் இரும்பு கூண்டிலிருந்து தரையிறங்கி கொண்டிருந்த போது, திடீரென கயிறு பாரம் தாளாமல் அறுந்தது.

இதனால், கூண்டில் இருந்த இருவரும் கீழே விழுந்து பலத்தகாயமடைந்தனர். இதை சற்றும்எதிர்பாராத அங்கிருந்த சக ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து, இருவரையும், அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி, சிஇஓ சஞ்சய் ஷா உயிரிழந்தார். படுகாயமடைந்த நிறுவன தலைவரான டி. விஸ்வநாத் ராஜு உயர்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்