கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 4 சவால்களை எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பெங்களூரு நகரில் நேற்றுமுன்தினம் நடந்த பிரமாண்டமான பாஜகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், பாஜகவை ஆட்சியில் அமர வைத்தால், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான வசதிகள் செய்யும். நாட்டில் இருந்து காங்கிரஸ் கலாச்சாரம் ஒழிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து முதல்வர் சித்தராமையா நேற்று பேசி இருந்தார். லோக் ஆயுக்தா, லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாத மோடி பிரதமர் பதவி வகிக்க தகுதியில்லை என கடுமயாகச் சாடி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூயிருப்பதாவது:
பிரதமர் மோடி ஊழல் குறித்து பேசும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் குறித்து பேசுவதற்கு முன் சில சவால்களை உங்களுக்கு வைக்கிறேன்:
1. ஊழல் குறித்து நீங்கள் பேசுவதற்கு முன், முதலாவதாக லோக்பால் அமைப்பை அமையுங்கள்.
2. இரண்டாவதாக, சொராபுதீன் கொலை வழக்கை விசாரணை செய்த சிபிஐ நீதிபதி லோயா மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
3. மூன்றாவதாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வின் சொத்துக்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது குறித்து விசாரியுங்கள்.
4. நான்காவதாக, கர்நாடக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஊழல் கறைபடியாத வேட்பாளரை நியமியுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
முதல்வர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு அளித்தபேட்டியின் போது, “ பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கொலை வழக்கில் சிறையில் இருந்தவர், கர்நாடக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தவர்” என கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago