புதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்து, இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடியாக உதவிக்கு சென்றது.
அரபிக் கடல், ஏடன் வளைகுடா, பெர்ஷியன் வளைகுடா, செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் சமீபகாலமாக டிரோன் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த தாக்குதலில் ஹவுதி தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். இஸ்ரேலுக்கு செல்லும் அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ட்ரோன் தாக்குதல் மற்றும் கடற் கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்திய போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கடத்தப்பட்ட மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களை இந்திய கடற்படை கப்பல்கள் மீட்டன.
இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் மார்ஷல் தீவுக்கு சொந்தமான ‘எம்.வி. ஜென்கோ பிகார்டி’ என்ற சரக்கு கப்பல் 22 மாலுமிகளுடன் சென்றது. இதில் 9 பேர் இந்தியர்கள். ஏடன் துறைமுகத்திலிருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் நேற்று முன்தினம் இரவு 11.11க்கு சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் உடனடியாக மீட்பு பணிக்கு விரைந்தது. நள்ளிரவு 12.20 மணியளவில் சரக்கு கப்பலை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இடைமறித்தது.
» சுற்றுலா சென்றபோது துயரம் - 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து ஏற்பட்டது எப்படி?
» குஜராத் துயரம்: ஏரியில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 14 பேர், ஆசிரியர்கள் இருவர் உயிரிழப்பு
இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர்கள் சரக்கு கப்பலில் நேற்று காலை ஏறி, டிரோன் தாக்குதலில் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்தனர். மிக மோசமான பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தபின், சரக்கு கப்பல் தொடர்ந்து பயணம் செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் அனுமதித்தனர். இதையடுத்து சரக்கு கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago