ஏடன் வளைகுடாவில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலை மீட்ட இந்திய போர்க் கப்பல்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவு கொடியுடன் இருந்த வணிகக் கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்புக்கு பதிலளித்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல், அந்த வணிகக் கப்பலை மீட்டு உதவியுள்ளது. பாதிக்கப்பட்ட கப்பல் அப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல், கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைக்காக ஏடன் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மார்ஷல் தீவு கொடியுடன் இருந்த எம்.வி.ஜென்கோ பிகேர்டி என்ற கப்பல் புதன்கிழமை இரவு 11.11 மணிக்கு அடையாளம் தெரியாதவர்களால் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து எம்வி ஜென்கோ பிகேர்டி அவசர உதவி கோரி அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கு பதில் அளித்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல், வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு பாதிக்கப்பட்ட கப்பல் அருகே சென்று உதவியது. தாக்குதலுக்குள்ளான கப்பலில் 9 மாலுமிகள் உட்பட 22 பணியாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வியாழக்கிழமை அதிகாலையில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் இருந்த கடற்படையைச் சேர்ந்த வெடிகுண்டுகளை அகற்றும் (இஒடி) நிபுணர்கள், தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அந்தக் கப்பலை முழுவதுமாக ஆய்வு செய்தப் பின்பு எம்.வி.ஜென்கோ பிகேர்டி தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.

முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில், வடக்கு அரபிக்கடல் பகுதியில் தாக்குதலுக்குள்ளான கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டனர். லிபேரியா நாட்டின் ‘எம்.வி. லீலா நார்ஃபோக்’ என்ற சரக்கு கப்பல், பிரேசில் நாட்டில் இருந்து பஹ்ரைனுக்கு சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் சோமாலியா கடற்கரை அருகே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, விரைவுப் படகில் ஆயுதங்களுடன் வந்த 6 கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறினர். அந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 மாலுமிகள் இருந்தனர்.

கப்பல் கடத்தப்பட்ட தகவல் இங்கிலாந்து நாட்டின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கடத்தல் குறித்த தகவல், இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சரக்கு கப்பலை மீட்க, ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பல் அனுப்பப்பட்டது. அதன்பின் போர்க் கப்பலில் இருந்து கடற்படையின் ‘மர்காஸ்’ கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலில் குதித்து, சரக்கு கப்பலின் கவச அறையில் இருந்த இந்திய மாலுமிகளை கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

கப்பலின் மற்ற பகுதியில் கடற்கொள்ளையர்களை தேடும் பணியில் கடற்படை கமாண்டோக்கள் ஈடுபட்டனர். ஆனால், எங்கும் கடற்கொள்ளையர்கள் இல்லை. இந்திய கடற்படையினர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலைவிட்டு தப்பியிருந்தனர். சரக்கு கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை என்பதை கடற்படை கமாண்டோக்கள் உறுதி செய்தனர்.

அரபிக் கடல் பகுதியில் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள் சரக்கு கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்கி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்து மிகவும் கவலையளிக்க கூடியதாக மாறியுள்ளது. இதனிடையே, அரபிக் கடல் பகுதியில் 4 போர்க் கப்பல்கள் ரோந்து செல்ல இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்