நேபாளத்தில் பேருந்து விபத்து: 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் லும்பினி மாகாணம் நேபாள்கஞ்ச் நகரில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, டாங் மாவட்டத்தின் பாலுபாங் என்ற இடத்தில் ரப்தி நதி மீதான பாலத்தில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கோகல்பூரில் உள்ள நேபாள்கஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனர். இவர்களில் இந்தியாவின் பிஹாரை சேர்ந்த யோகேந்திர ராம் (67), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முனே (31) ஆகியோரும் அடங்குவர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை, பேருந்து ஓட்டுநர் லால் பகதூர் நேபாளியை (28) போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE