சென்னை: வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வாயிலாக காசியோபியா-ஏ எனும் விண்மீன் வெடிப்பு எச்சங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன.1-ம் தேதி பூமியில் இருந்துசுமார் 650 கி.மீ உயரம் கொண்டசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் எக்ஸ்போசாட் மூலம் காசியோபியா-ஏ எனும் விண்மீன் வெடிப்பின் (சூப்பர் நோவா) எச்சங்களில் இருந்து வெளிப்படும் ஒளி, படம் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எக்ஸ்போசாட் மொத்தம் 469கிலோ எடை கொண்டது. இதில்எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு கருவிகளை பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன.
» ஆண்டாள் திருப்பாவை 27 | கருணையுடன் ஈர்ப்பவன் கோவிந்தன்..!
» “எங்கள் இருவரது பார்வையும் ஒன்றாக உள்ளது” - பவன் கல்யாணை சந்தித்தது குறித்து ராயுடு ட்வீட்
போலிக்ஸ் கருவியானது விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு, கோணத்தை அளவிடுதல், விண்மீன் வெடிப்பு உள்ளிட்டபல்வேறு அம்சங்களின் நிலை குறித்து ஆராயும். அதேபோல், எக்ஸ்பெக்ட் சாதனம் எக்ஸ் கதிர்களின் நீண்டகால செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள ஏதுவாக அவற்றின் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளை கண்காணிக்கும்.
அதன்படி எக்ஸ்பெக்ட் கருவியின் செயல்திறன் கடந்த ஜன.5-ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அதாவது, காசியோபியா-ஏ எனும் விண்மீன் வெடிப்பின் எச்சங்களை நோக்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. அப்போது அதிலிருந்து வெளியாகும் ஒளியை படம் பிடித்து அனுப்பியது. அவற்றை பகுப்பாய்வு செய்ததில் அந்த விண்மீன் வெடிப்பில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகளில் மெக்னீசியம், சிலிக்கான், சல்பர், ஆர்கான், கால்சியம் மற்றும் இரும்பு தனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago