இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தில் (இஸ்ரோ) ஐஐடி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தியுத்தியுள்ளார்.
சமீபத்தில், பாம்பே ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், விண்வெளித் துறையின் போக்கு குறித்தும், இஸ்ரோ முன்னெடுத்து வரும் புதிய ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் இணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் முன்வைத்தார்.
“நிலவில் சந்திரயான் தரையிறங்கிய பிறகு, மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் புதியபாய்ச்சலை நிகழ்த்தும் திட்டங்களை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இளைய தலைமுறையினரே புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.
நம் நாட்டில் திறன்மிக்க பொறியாளர்கள் பெரும்பான்மை யாக ஐஐடி-களிலிருந்து உருவாகி வருகின்றனர். எனவே, ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஊதிய அளவு காரணமாக ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்று கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் சோம்நாத் தெரிவித்திருந்தார். ‘‘சிலர் மட்டுமே இஸ்ரோவில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். பெருவாரியானவர்கள், ஊதியத்தைப் பார்த்துவிட்டு இஸ்ரோவில் இணையும் எண்ணத்தை விட்டுவிடுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அதிக எண்ணிக்கையில் ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் இணைய வேண்டும் என்று அவர் தற்போது வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago