பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா (61). இவர், அந்த மாவட்ட பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த சங்கத்துக்கு பணியாளர் நியமனம், உற்பத்தியாளர்களுக்கு பாக்கித் தொகை மற்றும் பால் விநியோகம் ஆகியவற்றில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் மாலூர்போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.8 லட்சம் ரொக்கப் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாலூரில் உள்ளநஞ்சே கவுடாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று காலையில் சோதனைநடத்தினர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 6 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆவணங்களும், கணக்கில் வராத லட்சக்கணக்கான பணமும் சிக்கியதாக தகவல் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்