புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் துபாய், மாலத்தீவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹாலிவுட் திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் புத்தாண்டு, பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாளை உலகின் பிரபல சுற்றுலா தலங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம் பிரபலங்களில் முதல் விருப்பத் தேர்வாக இருந்து வந்தது.
ஹாலிவுட் நடிகர்கள் வில் ஸ்மித், ஜேசன் ஸ்டேதம் உட்பட பல்வேறு பிரபலங்கள் துபாய்க்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் துபாயில் அடிக்கடி முகாமிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் துபாயில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி உலக பிரபலங்கள் துபாயை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் அண்டை நாடான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாலத்தீவு உலகின் பிரபல சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
» இந்தியா பலமுறை உதவிகள் செய்தும் மாலத்தீவு தலைவர்களின் வெறுப்புக்கு காரணம் என்ன?
» 2023-ல் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்
இந்த சூழலில் பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வியாபித்து பரவி வருகிறது.
கடந்த இரு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பிரபல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை ‘லைக்' செய்துள்ளனர்.
மாலத்தீவு தலைவர்களின் அவதூறு கருத்துகளால் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மாலத்தீவை தவிர்த்து இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்ல சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கோவா கடற்கரை சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி கேரளா அருகேயுள்ள லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago