புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் கமிட்டி அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அத்துடன், மத்திய பிரதேச தேர்தல் கமிட்டி மற்றும் அரசியல் விவகாரக் குழு அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில பிசிசி (பிரதேச காங்கிரஸ் கமிட்டி) தலைவராக கோவிந்த் சிங் தோதஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார். மகேந்திரஜீத் சிங் மால்வியா, மோகன் பிரகாஷ், சி பி ஜோஷி, ஹரிஷ் சவுத்ரி, ராம்லால் ஜாட், பிரமோத் ஜெயின் பயா, பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், உட்பட பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர,இளைஞர் காங்கிரஸ் தலைவர்,என்எஸ்யுஐ தலைவர், சேவாதளத் தலைமை ஒருங்கிணைப்பாளர், பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் ஆகியோரும் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கேரள தேர்தல் குழு தலைவராக கே.சுதாகர் நியமிக்கப்பட்டார். மூத்த தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வயலார் ரவி, வி.டி.சதீஷன், கே.சுரேஷ், சசி தரூர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதேச தேர்தல் குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் துணை முதல்வர் பட்டீப் விக்ரமார்க்க மல்லுவும், உத்தம் குமார் ரெட்டி மற்றும் ஹனுமந்த ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இமாச்சல தலைவராக பிரதீபா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, ம.பி.யில் ஜிதேந்திர சிங் தலைமையில் அரசியல் விவகாரக் குழுவையும் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
» கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மழை விடுமுறை
» ஆண்டாள் திருப்பாவை 23 | நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்!
சத்தீஸ்கர் தேர்தல் குழுவின் தலைவராக தீபக் பைஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சரண் தாஸ் மஹந்த் மற்றும் தாம்ரத்வாஜ் சாஹு ஆகியோருடன் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் முன்னாள் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.மணிப்பூரில் பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக கே மேகசந்திர சிங்நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக எஸ் சுபோங்மேரன் ஜமீரும், திரிபுரா பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக ஆசிஷ் குமார் சாஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago