மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவே பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது: கேஜ்ரிவால் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே பாஜக தன்னை கைது செய்ய விரும்புவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி அரசு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித் தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்தநவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் சம்மன் அனுப்பியது. ஆனால்அதனை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து 3-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதனையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “மாநிலங்களவைத் தேர்தல்,குடியரசு தின விழா ஏற்பாடுகள், அமலாக்க துறையின் வெளிப்படைத் தன்மையற்ற மற்றும்பதில் அளிக்காத அணுகுமுறையால் என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனக்கு கேள்விப் பட்டியலை அனுப்பி வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து டெல்லி அமைச்சர் அதிஷி தனது சமூக வலைதளப் பதிவில், “கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வருகிறது. கேஜ்ரிவால் கைது செய்யப்படலாம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவதை தடுப்பதற்காக பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது.

சம்மன்கள் சட்டவிரோத மானவை என்று அமலாக்கத் துறைக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சட்டவிரோத சம்மன்களை நான் ஏற்க வேண்டுமா? சட்டப்படி சரியான சம்மன் அனுப்பப்பட்டால், நான் அவற்றை ஏற்று செயல்படுவேன். எனது நேர்மையே மிகப்பெரிய சொத்து. எனது நற்பெயரை கெடுத்து என்னை நிலைகுலையச் செய்ய அவர்கள் விரும்புகின்றனர்.

8 மாதங்களுக்கு முன் சிபிஐஎன்னை அழைத்தபோது விசாரணைக்கு ஆஜரானேன். மக்களவைத் தேர்தலுக்கு முன் எனக்கு ஏன் சம்மன் அனுப்பப்படுகிறது? ஏனென்றால் அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக குற்றச்சாட்டு: இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பன்சூரி ஸ்வராஜ் கூறும்போது, “தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை கேஜ்ரிவால் மறந்து வருகிறார். அமலாக்கத் துறை 3 சம்மன்களை அனுப்பியுள்ளது. ஆனால் கேஜ்ரிவால் விசாரணையில் இருந்து தப்பி ஓடுகிறார். அவர் விசாரணையில் உட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.

அமலாக்கத் துறை ஆய்வு: இதற்கிடையில் கேஜ்ரிவால் அனுப்பிய பதிலை அமலாக்கத் துறை ஆய்வுசெய்து வருவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணைக்கு வருமாறு அவருக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்