ரயில் விபத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரயில்வே விபத்துகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு இந்த மனு, விசாரணைக்கு வந்தது. அப்போதுமத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் கூறியதாவது:

ரயில் விபத்துகளை தடுக்க செயல்படுத்தப்படும் அல்லது செயல்படுத்த முன்மொழியப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குப் பிறகான அடுத்த கட்ட விசாரணையின்போது மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாடு தழுவிய அளவில் ரயில் மோதலை தவிர்க்க கவாச் முறைஅறிமுகப்படுத்தப்பட்டால் எவ்வளவு செலவாகும் என்பதையும், இது தொடர்பாக ஏதேனும்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒடிசா ரயில் விபத்தில் 293 பேர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ரயில்வே வரலாற்றில் மிக மோசமானதாக கருதப்படும் இந்த விபத்து நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு ரயில்வேயில் உள்ள தானியங்கி பாதுகாப்பு அமைப்பான கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் தற்போது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்