நாடு முழுவதும் 263 பேருக்கு ஜேஎன்.1 வைரஸ் தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் இதுவரையில் 263 பேருக்கு கரோனா வைரஸின் துணை திரிபான ஜேஎன்.1 வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) நேற்று தெரிவித்துள்ளது.

இன்சாகாக்கின் நேற்றைய அறிக்கையின்படி, கேரளா (133), கோவா (51), குஜராத் (34), டெல்லி (16), கர்நாடகா (8), மகாராஷ்டிரா (9), ராஜஸ்தான் (5), தமிழ்நாடு (4), தெலங்கானா (2), ஒடிசா (1) என ஜேஎன். 1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று கடந்த டிசம்பரில் 239 பேரிடமும், நவம்பரில் 24 பேரிடம் கண்டறியப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, புதிதாக 573 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,565 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE