புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், தற்போது புதிதாக ‘எம்.எப்.ஸ்டார்’ ரேடார் மற்றும் பராக்-8 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்தாண்டு செப்டம்பரில் இணைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் எடை 45,000 டன். இதில் 30 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மேலும், இந்த கப்பலில் 1,600 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கலாம்.
தற்போது இதில் நவீன ‘எம்.எப்.ஸ்டார்’ என்ற ரேடார்பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்தரேடார் மூலம் கண்காணிப்புமற்றும் வழிகாட்டி பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும். இதன்மூலம் எதிரி நாட்டு போர் விமானம்,ஏவுகணைகளை உடனடியாக கண்டறிய முடியும்.
இதில் பொருத்தப்படும் பராக்-8 ஏவுகணைகளும் இஸ்ரேல் வடிவமைப்புதான். ஆனால் இது உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பராக்-8 ஏவுகணை, எதிரிநாட்டு போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை 80 கி.மீ.க்கும் அப்பால் அழிக்கும் திறனுடையது.
எம்.எப்.ஸ்டார் ரேடார் மற்றும் பராக்-8 ஏவுகணை கருவிகள் ஏற்கெனவே கொல்கத்தா மற்றும்விசாகப்பட்டினம் வகை போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்டுள் ளன. இந்தாண்டு மேற்கொள்ளப் படும் மிலன்-2024 என்ற சர்வதேகடற்படை போர்ப் பயிற்சியில் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபடுத்தப் படவுள்ளது. இந்த கப்பலில் பயன்படுத்தப்படும் மிக்-29கே ரக போர்விமானங்களுக்கு பதிலாக 26 ரபேல்-எம் ரக விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்குவதற் கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago