புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை சம்மன்அனுப்பியது. ஆனால், மாநிலத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான பணிகளில் இருப்பதால் ஆஜராக முடியாது என்று சோரன் கூறிவிட்டார்.
அதன்பிறகு, ஆகஸ்ட் 24, செப். 9, செப். 23-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்,சோரன் விசாரணைக்கு வரவில்லை. இதற்கிடையில், தனக்குஎதிராக அனுப்பப்பட்ட சம்மன்களை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்என்று சோரன் எச்சரித்தார். அதன்பிறகு 2 சம்மன்கள் அனுப்பப்பட்டன. கடைசியாக டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும்என்று சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், 7-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன்அனுப்பி உள்ளது. அதில், அவருக்கு வசதியான தேதி, நேரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago