ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 22 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியாகின. இதில் 199 தொகுதிகளில் 115 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பஜன் லால் சர்மாவும், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் கடந்த 15-ம் தேதி பதவியேற்றனர். மற்ற அமைச்சர்களை தேர்வு செய்வதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.
இதையடுத்து புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா விவரம் குறித்து முதல்வர் பஜன் லால் சர்மா டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் நிகழ்ச்சி ஜெய்ப்பூரில்உள்ள ராஜ் பவனில் நேற்று நடைபெற்றது.
இதில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரோடி லால் மீனா, கஜேந்திர சிங் கின்வ்சர் ஆகியோர் உட்பட 22 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களில்12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவம், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago