மக்களவை முதல்கட்டத் தேர்தல் அசாம், திரிபுரா மாநிலங்களில் திங்கள்கிழமை அமைதியாக நடைபெற்றது. அசாமில் 72.5 சதவீதமும் திரிபுராவில் 85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
16-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக அசாமின் தேஜ்புர், கோலியாபுர், ஜோராஹாட், திப்ருகர், லக்கிம்புர் ஆகிய 5 தொகுதிகள், திரிபுரா மாநிலத்தில் திரிபுரா மேற்கு தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.அனைத்துத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அசாம் முதல்வர் தருண் கோகோயும் அவரது மனைவி டோலி, மகன் கவுரவ் கோகோய் ஆகியோர் ஜோர்கட் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
கோலியாபுர் தொகுதியில் கவுரவ் கோகாய் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அசாம் கண பரிஷத்தின் மூத்த தலைவர் அருண் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
திரிபுரா மாநிலத்தில் திரிபுரா மேற்கு தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அகர்தலா வாக்குச்சாவடியில் அந்த மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் வாக்களித்தார்.
அசாமில் 72.5 சதவீதம்
தேர்தல் குறித்து துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
மாலை ஐந்து மணி நிலவரப்படி அசாமில் 72.5 சதவீதம் மற்றும் திரிபுராவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பொதுமக்கள் இன்னும் வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சதவீத எண்ணிக்கை உயரும். ஆங்காங்கே மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு, சிறு கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டன.கடந்த ஆண்டு அசாம் மாநிலம் முழுவதும் 69.6 சதவீத வாக்குகள் பதிவானது.
அசாமில் இதுவரை ரூ.1.13 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
திரிபுராவில் 85 சதவீதம்
திரிபுரா மாநிலம் குறித்து தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிஷ் வஸ்தவா கூறியதாவது:
ஒரே தொகுதியான திரிபுரா மேற்கில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு 86.25 சதவீதமாக இருந்தது. இங்கு 5521 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago