அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தியில் ரூ. 1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால், அங்கு ஏற்கனவே சிறிய அளவில் இருந்த ரயில் நிலையம் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தின் முகப்புத் தோற்றம்

இதனைத் தொடர்ந்து அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ரூ. 1,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டிடத்தின் முகப்பு அயோத்தி ராமர் கோயில் கட்டிடத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்புற சுவர் ஓவியங்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் உற்பத்தி நிலையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

6 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்: அயோத்தி ரயில் நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்ரித் பாரத் ரயிலுக்குள் ஏறி, அதனை ஆய்வு செய்தார். மேலும், ரயிலில் இருந்த பள்ளி மாணவர்களோடு அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவாறு இரண்டு புதிய அதிவேக அம்ரித் பாரத் ரயில்களையும், 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக, அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள். இதனையடுத்து, அங்கிருந்து அவர் அயோத்தி ரயில் நிலையத்துக்கு காரில் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலமும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. காரின் உள்ளே இருந்து கொண்டு கைகளை அசைத்தவாறு பயணித்த பிரதமர் மோடி, ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீழே இறங்கி அதன் படிகளில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து கைகளை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றார். பலர், அவர் மீது பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்