இந்தியாவில் ஒரே நாளில் 743 பேருக்கு கரோனா உறுதி: 7 பேர் பலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3,997 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.30) தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று கடந்த 7 மாதங்களாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது கேரளாவில் மூன்று பேர், கர்நாடகாவில் இரண்டு பேர் மற்றும் சத்தீஸ்கர் தமிழ்நாட்டில் தலா ஒருவர் என மொத்தம் ஏழு பேர் மரணித்திருக்கின்றனர். புதிதாக 743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3,997 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,358 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,44,75076 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, ரிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஹரியாணா மாநிலம், குருகிராம் நிர்வாகம் அனைத்து மருத்துவமனைகளையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. குருகிராமில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கோவிட்-19 அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு பிரத்யேகமாக தனி வார்டுகளை அமைக்குமாறு குருகிராம் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் நேற்று புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE