கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் சி,குரூப் டி பிரிவில் 13,000 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2022 ஜூலையில் அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெருக்கமான ஒரு நடிகையின் வீட்டில்இருந்து ரூ.50 கோடி ரொக்கம்பறிமுதல் செய்யப்பட்டது. பார்த்தாவுக்கு நெருக்கமானவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக மேற்குவங்கத்தின் 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான கெஸ்ட்பூர் பகுதியில் ராபின் யாதவ் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் ரூ.2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 13,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago