அயோத்தி விமான நிலையம், ரயில் நிலையம் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம்தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். ராமர் கோயில்திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் வசதிக்காக முதல்100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்