புதுடெல்லி: மத்திய ஆப்பிரிக்க நாடான கபோனிஸுக்கு சொந்தமான எம்.வி.சாய்பாபா என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அந்தக் கப்பல் மீது நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபோல, நார்வே நாட்டின் எம்.வி.ப்ளாமனென் என்ற ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற யுஎஸ்எஸ் லபூன் என்ற அமெரிக்க போர்க்கப்பல் யேமன் பகுதியிலிருந்து வந்த 4 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. ஏமனைச் சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள் (ஈரான் ஆதரவு) இந்தத் தாக்குதலை நடத்தினர். இதுபோல ஜப்பானுக்கு சொந்தமான, லைபீரியா நாட்டு கொடி பொருத்தப்பட்ட எம்.வி. கெம் புளுட்டோ கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவை நோக்கி அரபிக் கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
20 இந்திய ஊழியர்கள் இருந்த இந்த கப்பல் மீது நேற்று முன்தினம் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த இந்திய கடற்படையினர், கெம் புளுட்டோ கப்பலை மீட்டு மும்பை வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago