ஆந்திராவிலேயே முதன்முறையாக திருப்பதியில் குப்பையை உரமாக மாற்றும் இயந்திரம் அறிமுகம்: 1000 கிலோவில் 300 கிலோ உரம் கிடைக்கும்

By என்.மகேஷ் குமார்

அனைத்து வகையான குப்பைகளையும் உரமாக மாற்றும் திறன் கொண்ட இயந்திரம் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலமாக நாளொன்றுக்கு 1,000 கிலோ எடைகொண்ட குப்பைகளை உரமாக மாற்ற முடியும்.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக திருப்பதி விளங்குவதால் இங்கு அதிக அளவிலான குப்பைகள் சேர்கின்றன. இந்தக் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கவும் திருப்பதி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நகரிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக மாற்றும் திறன் படைத்த ‘பையோ செஸ்ட்’ இயந்திரம் திருப்பதி ரயில் நிலையம் அருகே நேற்று அமைக்கப்பட்டது. காய்கறி கழிவு, இறைச்சிக் கழிவு, காகிதங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளையும் இந்த இயந்திரம் மூலமாக உரமாக மாற்ற முடியும்.

பொதுமக்கள் பாராட்டு

நாளொன்றுக்கு 1,000 கிலோ எடைகொண்ட குப்பைகளை இந்த இயந்திரம் உரமாக மாற்றிவிடும். இதன் மூலமாக 1,000 கிலோ குப்பைக்கு 300 கிலோ என்ற வீதத்தில் உரங்களைப் பெறலாம். இதன் மதிப்பு ரூ.14.60 லட்சமாகும். திருப்பதி மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்